புகார் பெட்டி: சிறுவர் பூங்காவை நாசப்படுத்திய மாநகராட்சி
தாம்பரம் மாநகராட்சி, 1வது மண்டலம், 7வது வார்டு, இளங்கோ தெருவில் சிறுவர் பூங்கா உள்ளது. இப்பூங்காவின் ஒரு பகுதியில், பாதாள சாக்கடை திட்ட பம்பிங் ஸ்டேஷன் கட்டப்பட்டு வருகிறது.அதனால், பூங்காவை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர். அதனால், அங்குள்ள சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து நாசமாகிவிட்டன. நடக்க முடியாத அளவிற்கு நடைபாதை உள்ளது. எஞ்சிய பகுதிகளில், பணியாளர்கள் தங்குவதற்கு இரும்பு ஷீட் கொண்டு ஷெட் அமைத்துள்ளனர். மொத்தத்தில், யாரும் பயன்படுத்த முடியாத அளவிற்கு, பூங்காவை மாநகராட்சி நிர்வாகமே நாசமாக்கி விட்டது.மற்றொரு புறம், பூங்காவை சுற்றி கழிவுநீர் தேங்கி, கொசுத்தொல்லை, துர்நாற்றத்தால் பொதுமக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.- பகுதிவாசிகள், இளங்கோ தெரு.