உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / சென்னை / புகார் பெட்டி தாம்பரம் - முடிச்சூர் சாலையில் மாடுகள் தொல்லை அதிகரிப்பு

புகார் பெட்டி தாம்பரம் - முடிச்சூர் சாலையில் மாடுகள் தொல்லை அதிகரிப்பு

தாம்பரம் - முடிச்சூர் சாலையில் மாடுகள் தொல்லை அதிகரிப்பு

தாம்பரம் - முடிச்சூர் சாலையில், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சுற்றித்திரியும் மாடுகளால் தொல்லை அதிகரித்து விட்டது.பார்வதி நகர், வெளிவட்ட சாலை சந்திப்பு ஆகிய இடங்களில், தினசரி, ஏகப்பட்ட மாடுகள் படுத்துக் கிடக்கின்றன.அவை, திடீரென குறுக்கும், நெடுக்குமாக ஓடுவதோடு, அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை முட்டித் தள்ளுகின்றன.இரவு நேரத்தில், மாடுகள் படுத்துக் கிடப்பது தெரியாமல், வாகன ஓட்டிகள் அவற்றின் மீது மோதி விபத்தை சந்திக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- குடியிருப்போர் நலச்சங்கம், முடிச்சூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ