உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / சென்னை / புகார் பெட்டி: சாலை நடுவே மின்கம்பம் கவுல்பஜாரில் அபாயம்

புகார் பெட்டி: சாலை நடுவே மின்கம்பம் கவுல்பஜாரில் அபாயம்

பல்லாவரத்தை அடுத்த கவுல்பஜார் ஊராட்சி, வி.ஜி.என்., - 1 குடியிருப்புக்கு செல்லும் சாலையின் நடுவில் மின்கம்பம் ஒன்று உள்ளது.அதேபோல், கலைஞர் சாலையில், மின்கம்பம் சேதமடைந்து, எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயத்தில் உள்ளது. அப்படி விழுந்தால் பெரும் விபத்து ஏற்படும். இதுகுறித்து, பொழிச்சலுார் உதவி பொறியாளர், பல்லாவரம் செயற்பொறியாளர் ஆகியோருக்கு, அப்பகுதிவாசிகள் எத்தனையோ முறை புகார் தெரிவித்து விட்டனர். ஆனால், மக்களின் புகாரை அதிகாரிகள் தட்டிக்கழித்து வருகின்றனர். இப்படியே போனால், சேதமடைந்த கம்பம் விழுந்து, உயிர்பலி ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.- வியாபாரிகள், கவுல்பஜார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !