உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / சென்னை / குப்பையால் சுகாதார சீர்கேடு வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்து

குப்பையால் சுகாதார சீர்கேடு வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்து

திருவொற்றியூர் அடுத்த விம்கோ நகர், சக்திபுரம் பிரதான சாலை - ஸ்ரீரங்கம் நியூ டவுன், 3வது தெரு இணையும் சந்திப்பில், மின்மாற்றி ஒன்று உள்ளது. இங்கு, தினமும் காலை நேரங்களில் குடியிருப்புவாசிகள் குப்பை கொட்டி செல்கின்றனர். இதனால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. தவிர, அபாயகரமான குப்பையும் இதில் இருப்பதால், தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. கொட்டப்பட்டிருக்கும் குப்பையை மேயும் தெருநாய்கள் மற்றும் பசுமாடுகள், அவற்றை சாலையில் இழுத்து போடுகின்றன.இதன் காரணமாக, சுகாதார சீர்கேடுடன் விபத்து அபாயமும் நிலவி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட தனியார் துாய்மை பணி ஒப்பந்த நிறுவனம், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.கிறிஸ்டி, விம்கோ நகர், திருவொற்றியூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை