உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / சென்னை / இருளில் மூழ்கிய மணலி விரைவு சாலை

இருளில் மூழ்கிய மணலி விரைவு சாலை

மணலி, எம்.எப்.எல்., சந்திப்பு - சாத்தாங்காடு சந்திப்பு வரையிலான, மணலி விரைவு சாலையில், கன்டெய்னர் வாகனங்கள், மாநகர பேருந்துகள் உள்ளிட்டவை அதிகமாக சென்று வருகின்றன. மணலி புதுநகர், மணலி, மாதவரம், மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலை என்பதால், இரவு நேரங்களில் தனிநபர் போக்குவரத்து இருக்கும். இந்நிலையில், இந்த இடைபட்ட, 2 கி.மீ., சாலையில் உள்ள, 40க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் எரிவதில்லை. கண் சிமிட்டும் தெருவிளக்குகளால், சாலையில் பயணிக்க முடியவில்லை. எனவே, தெருவிளக்குகளை பராமரிக்கும், மாநகராட்சி மின்பிரிவு அதிகாரிகள் கவனித்து, முறையாக பராமரிக்க வேண்டும். - கே.எழில், மணலி புதுநகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ