சாலையில் மண் குவியல்: அச்சத்தில் வாகன ஓட்டிகள்
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நாளொன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. ஸ்ரீபெரும்புதுார் போலீஸ் நிலையம் அருகே, தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அதிக அளவு மண் குவிந்து உள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள், மண் குவியலில் இடறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி, சாலையோரங்களில் உள்ள மண் குவியலை அகற்ற, நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ச. விஜய், ஸ்ரீபெரும்புதுார்.