உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / சென்னை / நடைபாதை ஆக்கிரமிப்பு பாதசாரிகளுக்கு சிரமம்

நடைபாதை ஆக்கிரமிப்பு பாதசாரிகளுக்கு சிரமம்

தேனாம்பேட்டை மண்டலம், நுங்கம்பாக்கத்தில் ஜோசியர் தெரு உள்ளது. இத்தெருவில் பாதசாரிகள் வசதிக்காக அமைக்கப்பட்ட நடைபாதைகளை, வணிகர்கள் ஆக்கிரமித்து, தங்களது விற்பனை பொருட்கள், கடைகளின் பெயர் பதாகைகள் அமைத்துள்ளனர்.இதனால், நடைபாதையில் நடந்து செல்ல வழியில்லாமல், சாலையில் இறங்கி செல்ல வேண்டிய நிலைக்கு பாதசாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.மாநகராட்சி அதிகாரியிடம் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, நடைபாதையை மீட்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி