உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / சென்னை / அடையாறு கால்வாய் குறுக்கே சர்வீஸ் சாலை அமைக்கப்படுமா?

அடையாறு கால்வாய் குறுக்கே சர்வீஸ் சாலை அமைக்கப்படுமா?

தாம்பரத்தில் இருந்து மதுரவாயல் செல்லும் பைபாஸ் சாலையை ஒட்டி, சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியே ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.இந்நிலையில், குன்றத்துார் - -பல்லாவரம் சாலையில், அடையாறு கால்வாய் குறுக்கே கடந்து செல்லும் பைபாஸ் சாலையை ஓட்டி, சர்வீஸ் சாலை இல்லை. அங்கு, 100 மீட்டர் துாரத்திற்கு சர்வீஸ் சாலை இல்லாததால், தாம்பரத்தில் இருந்து சர்வீஸ் சாலை வழியே வரும் வாகனங்கள், குன்றத்துார் வழியே, கூடுதலாக 7 கி.மீ., துாரம் பயணித்து, கோவூர் அருகே மீண்டும் தாம்பரம்- - மதுரவாயல் பைபாஸ் சாலையின் சர்வீஸ் சாலையை பிடிக்க வேண்டியுள்ளது.இதனால், வாகன ஓட்டிகளுக்கு நேரமும், எரிபொருளும் விரயமாகிறது. மேலும், குன்றத்துார் பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.எனவே, தாம்பரம் - -மதுரவாயல் பைபாஸ் சாலையில், குன்றத்துார் அருகே அடையாறு கால்வாயின் குறுக்கே, பாலத்துடன் கூடிய சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.- கண்ணபிரான், குன்றத்துார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை