உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கோயம்புத்தூர் / பூ மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பால் கடும் போக்குவரத்து நெருக்கடி; குழிகளால் விபத்து அபாயம்

பூ மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பால் கடும் போக்குவரத்து நெருக்கடி; குழிகளால் விபத்து அபாயம்

ஆக்கிரமிப்பால் நெருக்கடி பூ மார்க்கெட் பகுதியில் சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளது. கடைகள், தள்ளுவண்டிகள் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளன. இதனால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. - பாலமுருகன், பூ மார்க்கெட்.உயிர் போனால் தான் நடவடிக்கையா? வேடப்பட்டியில் இருந்து பேரூர் செல்லும் சாலை மோசமாக சேதமடைந்துள்ளது. குழிகளால் சாலையில் இடதுபுறம் செல்ல வேண்டிய வாகனங்கள் வலது புறம் வரை வருவதால் விபத்துகள் நடக்கின்றன. இரவில் தெருவிளக்கு இல்லாததால் மேலும், அபாயகரமானதாக உள்ளது. அதிகாரிகளிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையுமில்லை. - உண்ணிகிருஷ்ணன், வேடப்பட்டி.வரவேற்கும் குப்பை ஜி.என்.,மில்ஸ், ஸ்ரீ சூர்ய லட்சுமி கார்டன்ஸ் குடியிருப்பு பகுதியின் முகப்பு பகுதியிலேயே, சாலையோரம் திறந்த வெளியில் குப்பை கொட்டப்படுகிறது. துப்புரவு பணியாளர்களும் அருகில் சேகரிக்கும் குப்பையை சேகரித்து இங்கே கொட்டுகின்றனர். இப்பகுதியை சுத்தம் செய்து, குப்பை கொட்டாமல் இருக்க நடவடிக்கை வேண்டும். - சங்கர் சுப்பிரமணியன், ஜி.என்., மில்ஸ்.இரவில் அதிகரிக்கும் விபத்து துடியலுார் முதல் கவுண்டம்பாளையம் வரை மேட்டுப்பாளையம் சாலை நடுவே உள்ள தெருவிளக்குகள் கடந்த சில நாட்களாக எரிவதில்லை. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பாதிக்கப்படுகின்றனர். இரவு நேரங்களில் விபத்துகளும் அதிகரித்துள்ளது. - சாந்தி, துடியலுார்சேதமடைந்த மின்மாற்றி கணபதி, 46வது வார்டு, முதல் தெரு, கஸ்துாரிபாய் வீதியில் உள்ள மின்மாற்றி சேதம் அடைந்த நிலையில் உள்ளது. மின்மாற்றி துாண்களில் கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. பெரும் மழை, காற்றில் விழுந்து விடும் நிலையில் உள்ளது. அசம்பாவிதம் நடக்கும் முன் மின்மாற்றியை மாற்ற வேண்டும். - சாந்தி, கணபதி.உடைந்த குழாய் மீது புது ரோடு ராமநாதபுரம், பங்கஜா மில் ரோட்டில், சாலை விரிவாக்க பணிகள் நடக்கிறது. சிக்னல் அருகே, சிவன் டிரேடர்ஸ் பெயின்ட் கடை அருகே மற்றும் பல இடங்களில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. உடைப்பை சரி செய்யாமல் அப்படியே மண் போட்டு மூடுகின்றனர். குழாய் உடைப்பை நாங்கள் சரி செய்ய முடியாது என கூறிவிட்டு சாலை விரிவாக்க பணிகளை செய்து வருகின்றனர். - ஜெயபால், ராமநாதபுரம்.திறந்தவெளியில் கழிவுநீர் கவுண்டம்பாளையம் அரசு ஊழியர் குடியிருப்பு பகுதிக்கு முறையான கழிவு நீர் வடிகால் வசதியில்லை. கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் திறந்த நிலையில் சாலையில் செல்கிறது. இதனால், குடியிருப்பு பகுதியில் கடும் துர்நாற்றம், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி கமிஷனர், மேயரிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. - சண்முகாம், கவுண்டம்பாளையம்.வீணாகும் குடிநீர் கவுண்டர் மில்ஸ், ஐ.டி.ஐ., பேருந்து நிறுத்தம் அருகே மெயின் குடிநீர் இணைப்பு குழாய் பழுதாகி குடிநீர் பல மாதங்களாக ரோட்டில் வீணாகி, அருகில் உள்ள சாக்கடையில் கலக்கிறது. விரைந்து குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும். - சங்கர், கவுண்டர் மில்ஸ்.குப்பை தேக்கம் வடவள்ளி, பேரூர் ரோடு, 39வது வார்டு, ஆர்.கே.ஜி., நகரில் சிலர் திறந்தவெளியில் குப்பையை வீசிச் செல்கின்றனர். சாலையோரம் தேங்கியுள்ள கழிவுகளால் அருகிலுள்ள குடியிருப்பில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. திறந்தவெளியில் குப்பை கொட்டுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். - மகாதேவன், வடவள்ளி.குழாய் உடைப்பு சிங்காநல்லுார், உப்பிலிபாளையம், பத்ரகாளியம்மன் கோவில் தெருவில், உப்பு தண்ணீர் குழாய் உடைந்து நீண்ட நாட்களாகியும் சரி செய்யவில்லை. தண்ணீர் வீணாக சாக்கடையில் சென்று கொண்டிருக்கிறது. குழாய் உடைப்பை விரைந்து சரி செய்து தர வேண்டும். - ராதா, உப்பிலிபாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை