உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கோயம்புத்தூர் / சாலை வேலை முடிந்தும் சுற்ற விடுவது ஏன்? விளாங்குறிச்சி, சேரன்மாநகர் மக்கள் கேள்வி

சாலை வேலை முடிந்தும் சுற்ற விடுவது ஏன்? விளாங்குறிச்சி, சேரன்மாநகர் மக்கள் கேள்வி

நிரம்பி வழியும் சாக்கடை

சிங்காநல்லுார், பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள, ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் மண் நிறைந்துள்ளது. கழிவுகளும் அடைத்து, சாக்கடை நீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதுகுறித்து, கவுன்சிலரிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை.- தாரிகா, சிங்காநல்லுார்.

தெருவிளக்கு பழுது

சவுரிபாளையம், அண்ணாமலை நகர், நான்காவது வீதியில், ' எஸ்.பி -11, பி -8' என்ற எண் கொண்ட கம்பத்தில் கடந்த 10 நாட்களாக, தெருவிளக்கு எரியவில்லை. இரவில் பணி முடித்து வீட்டுக்கு திரும்பும் பெண்கள் உள்ளிட்டவர்கள் பாதிப்படைகின்றனர். விரைந்து தெருவிளக்கு பழுதை சரிசெய்ய வேண்டும்.- திவ்யா, சவுரிபாளையம்.

மலைபோல் குவியும் குப்பை

குனியமுத்துார், இடையர்பாளையம் பிரிவு, மணிகண்டன் நகரில், மின்வாரிய அலுவலகத்திற்கு பின்புறம் தொடர்ந்து திறந்தவெளியில் குப்பை கொட்டப்படுகிறது. மலைபோல் சாலையோரம் குப்பை குவிந்துள்ளது. சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் கொசுப்புழுக்கள் உற்பத்தி உள்ளது. இதனால், இப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.- ரோகிணி, மணிகண்டன்நகர்.

பார்க்கிங்கால் அவதி

சங்கனுார் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக, சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. நாளுக்கு நாள் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கை, அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதனால், பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பாதசாரிகள் சாலையில் நடக்க வேண்டிய நிலை உள்ளது.- சுப்பிரமணியன், சங்கனுார்.

அதிகரிக்கும் குற்றங்கள்

மாதம்பட்டி ஊராட்சி, சரவணா நகரில், கடந்த ஆறு மாதமாக தெருவிளக்குகள் எரியவில்லை. தெருவிளக்குகள் பழுது குறித்து ஊராட்சி அதிகாரிகளிடம், புகார் அளித்தும் நடவடிக்கையில்லை. இரவு நேரங்களில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதுடன், குற்றங்களும் அதிகரிக்கின்றன.- சுகுணா, மாதம்பட்டி.

மின்விபத்து அபாயம்

செட்டிபாளையம் ரோடு, ஜெ.ஜெ.நகர், அம்பேத்கர் நகர், இரண்டாவது வீதியில் உள்ள மின்கம்பத்தின் ஒயர்கள், உரசிக்கொண்டே இருக்கின்றன. அடிக்கடி மின்பொறி பறக்கிறது, மின்வெட்டும் ஏற்படுகிறது. மின்விபத்து ஏற்படும் முன் விரைந்து சரிசெய்ய வேண்டும்.- அருண்குமார், ஜெ.ஜெ.நகர்.

எரியா விளக்கு

கிழக்கு மண்டலம், ஐந்தாவது வார்டு, 'எஸ்.பி - 23, பி -52' என்ற எண் கொண்ட கம்பத்தில், கடந்த இரண்டு மாதங்களாக தெருவிளக்கு எரியவில்லை. மாலை, 6:00 மணிக்கு மேல், வீதிகளில் நடமாட முடியவில்லை. விரைந்து தெருவிளக்கு பழுதை சரிசெய்து தர வேண்டும்.- வேணி, காந்திபுரம்.

மூடப்பட்ட சாலையால் அவதி

பீளமேடு, விளாங்குறிச்சியில், பல்வேறு பணிகளுக்காக மூடப்பட்ட சாலை, பணிகள் முடிந்த பின்னரும் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கவில்லை. இதனால்,பல கிலோ மீட்டர் குடியிருப்புவாசிகள் சுற்றிவர வேண்டிய நிலை உள்ளது. மிகுந்த சிரமப்படுவதால், பணிகள் முடிந்த சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும்.- சுப்பிரமணியம், பீளமேடு.

சுகாதாரமற்ற ரேஷன் கடை

நஞ்சுண்டாபுரம் ரோடு, ராமநாதபுரம், ரேஷன் கடை போதிய பாரமாரிப்பின்றி உள்ளது. கடையை சுற்றிலும் அசுத்தமாக இருப்பது குறித்து, பலமுறை புகார் செய்தும் பலனில்லை. மக்களுக்கு வழங்கும் உணவுப்பொருட்கள் வைத்திருக்கும் கடையை சுற்றிலும் சுத்தமாக பாராமரிக்க நடவடிக்கை வேண்டும்.- பிரியா, ராமநாதபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ