புகார் பெட்டி...
வாகன ஓட்டிகள் அவதிவிருத்தாசலம் நகர சாலைகளில் பாஸ்ட் புட் கடைகளில் இருந்து வெளியேறும் மிளகாய் துகள்களால் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் போன்ற உபாதைகள் ஏற்படுகிறது.சந்தோஷ்குமார், பெரியார் நகர்.கழிவுநீரால் பாதிப்புகடலுார் ராஜாம்பாள் நகர் இரண்டாவது குறுக்கு தெருவில், பாதாள சாக்கடை கழிவுநீர் மற்றும் குடிநீர் இணைப்பு கசிவால் பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் அச்சம் உள்ளது.லலிதா, ராஜாம்பாள் நகர்.மது பாரான பள்ளி வளாகம்பெரியவடவாடி அரசு நடுநிலை பள்ளி வளாகத்தில், சமூக விரோதிகள் சிலர் தினசரி மது அருந்திவிட்டு, பாட்டில்களை உடைத்து செல்வதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதியடைகின்றனர். செல்வக்குமார், விருத்தாசலம்.