மேலும் செய்திகள்
புகார் பெட்டி...
07-Aug-2026
பயணிகள் அவதி விருத்தாசலம் பஸ் நிலையத்திற்குள் கார், வேன், இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பயணிகள், போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மிகுந்த சிரமமடைகின்றனர். ராஜ்குமார், விருத்தாசலம். விபத்து அபாயம் விருத்தாசலம் காட்டுக்கூடலுார் சாலையை ஆக்கிரமித்து வியாபாரிகள் கடைகள் போட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கடுமையாக அவதியடைகின்றனர். கண்ணன், விருத்தாசலம்.சிக்னல் அமைக்கப்படுமா? மந்தாரக்குப்பம் புதிய பஸ் நிலையம் சந்திப்பு அருகில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும். சரவணன், மந்தாரக்குப்பம். புறவழிச்சாலையில் விபத்து அபாயம் விருத்தாசலம் கோ.பொன்னேரி புறவழிச்சாலை ரவுண்டானாவில் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. செந்தில்குமார், விருத்தாசலம்.
07-Aug-2026