விபரீதத்திற்கு வழி வகுக்கும் சேதமான டிரான்ஸ்பார்மர்
ரோட்டில் கிடக்கும் கேபிள் ஒயர்கள் திண்டுக்கல் திருச்சி ரோடு ரயில்வே மேம்பாலம் சர்வீஸ் ரோட்டிலிருந்து ஜி.டி .என். சாலையில் கேபிள் ஒயர்கள் அறுந்து கீழே கிடக்கிறது. இதனால் வாகனங்களில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் ஒயரை ஒழுங்குபடுத்த வேண்டும். முருகன், திண்டுக்கல். .............----------தரைபாலம் சேதத்தால் பாலம் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் ரோட்டில் தரைபாலம் சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது .பள்ளத்தில் குச்சியை நட்டு வைத்துள்ளனர் .இரவு நேரங்களில் பலரும் பள்ளம் தெரியாமல் நிலைதடுமாறி விழுகின்றனர் .பள்ளத்தை மூட வேண்டும். செல்வம், திண்டுக்கல். ............----------பராமரிப்பற்ற சுகாதார வளாகம் வேடசந்துார் அருகே வே.புதுக்கோட்டை ஏ.டி. காலனியில் மகளிர் சுகாதார வளாகம் தண்ணீர் இன்றி பராமரிப்பு இல்லாமல் உள்ளது .இதனால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர் .தண்ணீர் வசதி ஏற்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.அ.சந்திரசேகர், மாரம்பாடி . .............---------- ஆபத்தான டிரான்ஸ்பாரமர் திண்டுக்கல் மாநகராட்சி 36 வது வார்டு சந்தை ரோட்டிலிருந்து சிறுமலை செட் ரோடுக்கு செல்லும் பால்சாமி அய்யர் சந்தில் டிரான்ஸ்பார்மர் ஆபத்தான நிலையில் கம்பிகள் வெளியே தெரியும்படி உள்ளது . விபத்து முன் புதிதாக அமைக்க வேண்டும் .முத்துச்சாமி, நாகல்நகர். ..........-----------குவிக்கப்படும் குப்பை பழநி இடும்பன் மலை ரோடு அருகே வள்ளியப்பா கார்டன் பழைய ரேஷன் கடை அருகே குப்பை குவிந்து பல நாட்களாக அள்ளாமல் உள்ளது .பக்தர்கள் நடந்து செல்லும் பாதையில் குப்பை கொட்டி குவிப்பதால் அசுத்தமாக உள்ளதோடு நோய் தொற்றுக்கு வழி தருகிறது .பாலன் பழநி. ...............------------சாக்கடையில் கழிவுநீர் தேக்கம் திண்டுக்கல் - பழநி ரோடு இடையபட்டியில் சாக்கடையில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது .தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் கழிவுநீர் தேங்கி பாதாசாரிகள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர் .சாக்கடை அமைத்து தர வேண்டும். முத்துக்குமார், இடையபட்டி . ..........-----------வாகனங்களில் அதிக லோடால் விபத்து திண்டுக்கல்லில் வாகனத்தில் அதிக அளவில் மூடைகளை ஏற்றி செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. தொங்கியபடியே செல்வதால் பின்வரும் வாகனங்கள் அச்சத்துடன் செல்கின்றன. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவக்குமார், திண்டுக்கல். .............-----------