உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி  

வாகன ஓட்டிகள் பெரும் அவதிகள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றுப்பாலத்தில் சாலை பழுதடைந்து பள்ளம் மேடுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கணேசன், விநாயகா நகர், கள்ளக்குறிச்சி.ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?கள்ளக்குறிச்சி சுந்தர விநாயகர் கோவில் தெருவில் சாலையோர கடைகளின் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.நாகராஜன், கள்ளக்குறிச்சி.குப்பை குவியல் கள்ளக்குறிச்சி மின் மயானத்தில் குப்பை குவியலால் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் உள்ளது. ராமச்சந்திரன், கள்ளக்குறிச்சி.பாதுகாப்பு கேள்விக்குறி கள்ளக்குறிச்சி காந்தி ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வரும் போதை ஆசாமிகளால் பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.சீதாலட்சுமி, கள்ளக்குறிச்சி.டாஸ்மாக் கடை மாற்றப்படுமா?தியாகதுருகம் முருகன் கோவில் அருகே 50 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவராமன், தியாகதுருகம்.நாய் தொல்லையால் அவதி திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட என்.ஜி.ஜி.ஓ., நகர், கீழையூர், சந்தப்பேட்டை பகுதிகளில் பெருகியுள்ள நாய் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரகோத்தமன், கீழையூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி