புகார் பெட்டி கள்ளக்குறிச்சி
நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு
எலவனாசூர்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் தள்ளு வண்டி, தற்காலிக கடைக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளதால் சாலை குறுகி விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.-குமார், எலவனாசூர்கோட்டை. ஏரியில் குப்பைகள்
எறையூர் அடுத்த கூத்தனுார் ஏரியில் அப்பகுதியினர் குப்பைகளை கொட்டுவதால் குடிநீர் மாசடைகிறது.-கந்தசாமி, கூத்தனுார். வாய்க்கால் இல்லை
கூ.தாங்கல் பகுதியில் குடியிருப்புகளுக்கு இடையே கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாததால் தெருவில் நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.-கோவிந்தன், கூ.தாங்கல். மூடிக்கிடக்கும் ரேஷன் கடைகள்
கள்ளக்குறிச்சி பகுதியில் பல ரேஷன் கடைகள் பெரும்பாலான நாட்களில் மூடிக் கிடக்கிறது. பொருட்கள் வாங்க வரும் ரேஷன் கார்டுதாரர்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.-நரேந்திரன், கள்ளக்குறிச்சி.