உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கள்ளக்குறிச்சி / புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

உணவு ஆய்வு செய்யப்படுமா? கள்ளக்குறிச்சி நகரில் உள்ள அனைத்து ஸ்வீட் ஸ்டால் கடைகளில் இனிப்பு, கார வகைகளில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி நாள் குறிப்படாமல் விற்பனை செய்யப்படுகிறது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். பிரேமானந்தம், கள்ளக்குறிச்சி. -தாறுமாறாக வாகனம் நிறுத்தம் கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் சாலையில் இரு சக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்துவதால் அவ்வழியாக செல்லும் கனரக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். பிரபா, கள்ளக்குறிச்சி. குப்பைக்கு தீ வைப்பு மடப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே குப்பைகள் கொட்டி அடிக்கடி தீ வைத்து எரிப்பதால் அவ்வழியாக செல்லும் பஸ் பயணிகள், வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மனோகரன், கள்ளக்குறிச்சி. நிழற்குடை அமைக்கப்படுமா? கள்ளக்குறிச்சி - கச்சராயபாளையம் சாலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் அதிகளவில் காத்திருந்து பஸ்களில் ஏறிச் செல்லும் நிலையில், அவ்விடத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் சிரமப்படுகின்றனர். அழகுராஜா, கள்ளக்குறிச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை