புகார் பெட்டி ..
பஸ் நிறுத்தம்
சேலம் முதல் சிதம்பரம் வரை செல்லும் அரசுப் பேருந்துகள் குரால் பிரிவு ரோட்டில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். -செந்தில்குமார், குரால். கழிவு நீர் கால்வாய்
கச்சிராயபாளையம், டேம் சாலையில் நடக்கும் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுரேஷ், வடக்கனந்தல். மேம்பாலம் தேவை
திருக்கோவிலுார், சந்தைபேட்டை அரும்பாக்கம் புறவழிச்சாலையில் விபத்து ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -கணேசன், அரும்பாக்கம் . பொழுபோக்கு பூங்கா
திருக்கோவிலுார் அணைக்கட்டு பகுதியில் பொதுமக்களின் பொழுதுபோக்கு அம்சத்திற்காக பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சந்தோஷ், திருக்கோவிலுார்.