உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

சாலைகள் அகலப்படுத்தப்படுமா?

கள்ளக்குறிச்சி நகர பகுதியில் பிரதான சாலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அகலப்படுத்த வேண்டும்.-இளமுருகு அன்பரசு, சோமண்டார்குடி.

சமூக விரோதிகளின் கூடாரம்

கள்ளக்குறிச்சி சிறைச்சாலை அருகே பயனின்றி கிடக்கும், பழைய கோர்ட் வளாகம் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.-ராம், கள்ளக்குறிச்சி.

மருத்துவமனைக்கு கூடுதல் பஸ்

கள்ளக்குறிச்சியில் இருந்து அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்து இயக்க வேண்டும். -சக்திவேல், தியாகதுருகம்.

ஏரிக்கரை சேதம்

கள்ளக்குறிச்சி பெரியேரிக்கரையை உடைத்து சாலை பணிகள் நடப்பதால், மழைக்காலங்களில் கரை வழியாக தண்ணீர் வழிந்தோடி சாலையில் தேங்குகிறது. -காமராஜ், கள்ளக்குறிச்சி.

நான்கு வழிச்சாலை தேவை

கள்ளக்குறிச்சி அடுத்த அம்மன் நகரிலிருந்து காரனுார் கைகாட்டி வரை கச்சிராயபாளையம் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றிட வேண்டும்.-அருணாசலம், கள்ளக்குறிச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

R.Ethirajan
ஜூன் 14, 2025 11:19

இன்று உலக குருதி கொடையாளர் தினம் கல்லூரி பாட புத்தகங்களில் குருதி கொடையின் முக்கியதுவத்தை வலியுறுத்தும் மருத்துவர்களின் கட்டுரைகளை வெளியிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் இரா.எத்திராஜன் 30வருட தன்னார்வ் குருதி கொடையாளர்


R.Ethirajan
ஜூன் 14, 2025 11:13

மேற்கு சைதை பகுதியில் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிறந்த முறையில் நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறைகளை அமைக்க சென்னை மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இரா எத்திராஜன் சைதை மேற்கு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை