புகார் பெட்டி கள்ளக்குறிச்சி
ஏரிக்கரை சேதம், நீர் கசிவு
கள்ளக்குறிச்சி பெரியேரிக்கரையை உடைத்து சாலை பணிகள் நடப்பதால், மழைக்காலங்களில் கரை வழியாக தண்ணீர் வழிந்தோடி சாலையில் தேங்குகிறது.-காமராஜ், கள்ளக்குறிச்சி. நான்கு வழிச்சாலை தேவை
கள்ளக்குறிச்சி அடுத்த அம்மன் நகரிலிருந்து காரனுார் கைகாட்டி வரை கச்சிராயபாளையம் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும்.-அருணாசலம், கள்ளக்குறிச்சி. வீட்டு வசதி வாரிய வீடுகள்
கள்ளக்குறிச்சி நகரில் ஏழைகளுக்கு தமிழக அரசு வீட்டு வசதி வாரியம் மூலம் வீடுகளை கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பாலகிருஷ்ணன், கள்ளக்குறிச்சி. பொதுக்கழிப்பிடம் ஏற்படுத்தப்படுமா?
கள்ளக்குறிச்சியில் பொது கழிப்பிட வசதி மிகவும் குறைவாக உள்ளதால், கூடுதல் எண்ணிக்கையில் கழிப்பிடங்களை ஏற்படுத்த வேண்டும்.-அருண், கள்ளக்குறிச்சி. பரவும் கரி துகள்கள்
கள்ளக்குறிச்சி நகர பகுதியில் அரிசி ஆலைகளின் மூலம் வெளியேறும் கரி துகள்கள் அதிகமாக உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. -சதீஷ், கள்ளக்குறிச்சி. கோவிலை மறைத்து பேனர்
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரில் கங்கையம்மன் கோவிலை மறைத்து பேனர் வைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-முரளி, கள்ளக்குறிச்சி.