உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கள்ளக்குறிச்சி / புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

வேகத்தடையால் அவதி

கள்ளக்குறிச்சி புதுவீட்டு சந்திப்பில் அதிகளவிலான வேகத்தடைகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.-பிரேமானந்தம், கள்ளக்குறிச்சி.

நாய்கள் தொல்லை

சங்கராபுரம் பேரூராட்சி பகுதியில் நாய்கள் தொல்லையால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர்.-ராமசாமி, சங்கராபுரம்.

குறைந்த மின் அழுத்தத்தால் அவதி

மூங்கில்துறைப்பட்டு அண்ணா நகர் பகுதியில் அவ்வப்போது ஏற்படும் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின் சாதனங்கள் பழுதாவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.-குணா, மூங்கில்துறைப்பட்டு.

சாலையோரம் இறைச்சி கழிவு

சங்கராபுரம் பூட்டை சாலையில் இறைச்சி கழிவுகளை சாலையோரம் கொட்டுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.-பாலாஜி, சங்கராபுரம்.

சாலையில் வாகனங்கள் நிறுத்தம்

மூங்கில்துறைப்பட்டு நான்குமுனை சந்திப்பில், சாலையிலேயே நிறுத்தும் இரு சக்கர வாகனங்களால் விபத்துகள் அதிகரித்து வருகிறது.-சூரியா, மூங்கில்துறைப்பட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை