உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி..

மயானப்பாதையில் குப்பைகள்

மணம்பூண்டி துரிஞ்சலாற்றங்கரை மயானப்பாதையில் குப்பைகள் கொட்டப்படுவதால் பாதை குறுகலாகி உள்ளது. --கிருஷ்ண பிரதாப் சிங், மணம்பூண்டி.

கழிவுநீர் கால்வாய் தேவை

உளுந்துார்பேட்டை அடுத்த குச்சிப்பாளையம் கிராமத்தில் கால்வாய் அமைக்காததால், கழிவுநீர் தெருக்களில் தேங்கி தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. -ஆறுமுகம், குச்சிப்பாளையம்.

குடிநீர் குழாய் உடைப்பு

கெடிலத்திலிருந்து உளுந்துார்பேட்டைக்கு வரும் குடிநீர் குழாயில், உடையாநந்தல் அருகே உடைப்பு ஏற்பட்டுள்ளதால், குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளது. -அருண், கெடிலம்.

வாகன நெரிசலால் அவதி

உளுந்துார்பேட்டையிலிருந்து, கிளியூர் செல்லும் சாலை குறுகலாக உள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாமல் திணறுகின்றன.-சிவக்குமார், கிளியூர்.

குண்டும் குழியுமான சாலை

உளுந்துார்பேட்டையிலிருந்து, பு.கொனலவாடி செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் உடனடியாக சீரமைக்க வேண்டும்.-இளையாராஜா, பு.கொனலவாடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை