உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி..

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பைபாஸ் சாலை சந்திப்பில், சர்வீஸ் சாலையில் வழிந்தோடும் கழிவு நீரால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மனோகர், கள்ளக்குறிச்சி. விதிமீறி பார்க்கிங் உளுந்துார்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முன்பு விதிமீறி தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் மாணவ மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். செல்வம், உளுந்துார்பேட்டை ஏரியில் கழிவுநீர் கலப்பு சின்னசேலம் ஏரிக்கரை பகுதியில் கொட்டப்படும் குப்பை மற்றும் கழிவு நீர் கலப்பால் சுகாதார சீர்கேடு அவலம் ஏற்பட்டுள்ளது. பிரதாப், சின்னசேலம். பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு உளுந்துார்பேட்டை பஸ் நிலையத்தில் நடைபாதைகளில் கடைகள் ஆக்கிரமித்து கொள்வதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். திருவேங்கடம், உளுந்துார்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை