உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

ஆக்கிரமிப்பு கள்ளக்குறிச்சி காய்கறி மார்கெட் பகுதியில் சாலையில் தள்ளுவண்டி கடைகளை அமைத்து ஆக்கிரமித்து, வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்படுத்தி வருகின்றனர். -நாகராஜன் ருத்ரைய்யன், கள்ளக்குறிச்சி. பூட்டி கிடக்கும் கழிப்பறை சின்னசேலம் ரயில் நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் திறக்காமல் பூட்டி வைத்திருப்பதால், பயணிகள் பாதிப்படைகின்றனர். -பரசுராமன், சின்னசேலம். புகையால் அவதி உளுந்துார்பேட்டை சேலம் சாலையில் குப்பைகளை தீயிட்டு எரிப்பதால், காற்று மாசு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். -கிருஷ்ணமூர்த்தி, உளுந்துார்பேட்டை. சாலை ஆக்கிரமிப்பு எலவனாசூர்கோட்டை பஸ் நிறுத்தம் பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகளால் வாகனங்கள் செல்ல முடிவதில்லை. -கவியரசன், எலவனாசூர்கோட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !