/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / புகார் பெட்டி செய்தி : திறந்தநிலை மழைநீர் சேகரிப்பு தொட்டி சீரமைக்க வேண்டும்
புகார் பெட்டி செய்தி : திறந்தநிலை மழைநீர் சேகரிப்பு தொட்டி சீரமைக்க வேண்டும்
உத்திரமேரூர் ஒன்றியம், ஆதவப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட, வெங்கச்சேரி கிராமத்தில், துணை சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மருத்துவ சேவையை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், துணை சுகாதார நிலையத்தில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது, முறையான பராமரிப்பு இல்லாததால், மழைநீர் சேகரிப்பு தொட்டி மூடி இல்லாமல் திறந்த நிலையிலே உள்ளது.இந்த சேகரிப்பு தொட்டி அருகே சிறுவர்கள் அவ்வப்போது விளையாடி வருகின்றனர். அப்போது, எதிர்பாராதவிதமாக சிறுவர்கள் மழைநீர் சேகரிப்பு தொட்டியில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எனவே, மழைநீர் சேகரிப்பு தொட்டி மீது, கான்கிரீட் மூடி அமைக்க வேண்டும்.-- ஆர்.நாதமுனி, வெங்கச்சேரி.