உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / புகார் பெட்டி செய்தி : கிரஷர்களில் இருந்து பறக்கும் புழுதி தடுக்கப்படுமா?

புகார் பெட்டி செய்தி : கிரஷர்களில் இருந்து பறக்கும் புழுதி தடுக்கப்படுமா?

உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் கிராமத்தில், ஐந்திற்கும் மேற்பட்ட கிரஷர்கள் இயங்கி வருகின்றன. இந்த கிரஷர்களில் ஜல்லிகள் உடைக்கும்போது, அங்கிருந்து புழுதிகள் பறந்து விவசாய நிலங்கள் மற்றும் வனப்பகுதிகளில் படிகின்றன.அவ்வாறு, செடி, கொடிகள் மீது புழுதி படிவதால் மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லப்படும் கால்நடைகள் மேயாமல் திரும்பி விடுகிறது. அதேபோல, சாலையோரங்களில் இயங்கும் கிரஷர்களில் இருந்தும் புழுதி பறப்பதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.எனவே, புழுதி பறப்பதை தடுக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.முருகன்,திருமுக்கூடல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை