பூட்டி கிடக்கும் ரயில்வே கழிப்பறையை திறக்க பயணியர் வேண்டுகோள்
வாலாஜாபாத் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தோர், வாலாஜாபாத் ரயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரயிலில் பயணிக்கின்றனர். இந்த ரயில் நிலையத்தில் பயணியர் பயன்பாட்டிற்கென கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும், அக்கழிப்பறை முறையாக செயல்படுத்தபடாமல் குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டும் திறந்து வைத்து பெரும்பாலான நேரம் மூடியே வைக்கப்பட்டுள்ளது. இதனால், கழிப்பறைக்கு வரும் பயணியர் பயன்படுத்த முடியமால் அவதிப்படுகின்றனர். எனவே, வாலாஜாபாத் ரயில் நிலைய கழிப்பறையை எப்போதும் திறந்து பயன்பாட்டிற்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும். - எஸ்.ஆறுமுகம், திம்மராஜம்பேட்டை.