மேலும் செய்திகள்
விசூர் குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்
24-Apr-2025
நங்கையர்குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்
11-May-2025
உத்திரமேரூர் ஒன்றியம், திருவாணைக்கோவில் ஊராட்சி, விச்சூர்தோப்பு துணை கிராமத்தில் பொது குளம் உள்ளது. இந்த பொது குளம் அப்பகுதியின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது.இந்த குளத்தின் கரையில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், இறந்தவர்களுக்கு ஈமச்சடங்குகள் செய்து குளத்தில் குளிப்பது வழக்கம். தற்போது, கோடை வெயில் காரணமாக பொது குளம் தண்ணீரின்றி வறண்டு உள்ளது.இந்நிலையில், குளத்தின் அருகே உள்ள குடியிருப்புகளில் சேகரிக்கப்படும் குப்பை, குளத்தில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், குளத்தில் தண்ணீர் நிரம்பும்போது, அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே, பொதுகுளத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- ஆர். பூவிழி ராமச்சந்திரன்,உத்திரமேரூர்.
24-Apr-2025
11-May-2025