புகார் பெட்டி : சாலை வளைவில் வேகத்தடை வேண்டும்
காஞ்சிபுரம் அடுத்த, பொன்னேரிக்கரையில் இருந்து, காரை, ஆண்டிச்சிறுவள்ளூர் வழியாக, பரந்தூர் செல்லும் சாலை உள்ளது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்தோர் இச்சாலை வழியை பயன்படுத்தி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இந்த சாலையில், சிறுவாக்கம் அடுத்த, வேலம்மாள் தனியார் பள்ளி அருகே, அடுத்தடுத்த மூன்று இடங்களில் அபாயகரமான வளைவுகள் உள்ளன.இந்த வளைவு பகுதிகளில் எதிரே வரும் வாகனங்கள் ஒன்றையொன்று கடந்து செல்லும் போது, வாகன ஓட்டிகள் அச்சத்திற்கு உள்ளாகின்றனர். மேலும், இரவு நேரங்களில் மின்வசதி இல்லாமல், இப்பகுதியில் இருள் சூழந்துள்ளதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.எனவே, அபாயகரமான இச்சாலை வளைவில் வேகத்தடை மற்றும் எச்சரிக்கை பலகை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ். பிரமே்ராஜ்,மேல்பொடவூர்.