உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

சாலையோர முட்செடிகளால் வாகன ஓட்டிகள் அவதி வ ண்டலுார் --- வாலாஜாபாத் சாலையில், படப்பை அடுத்த, ஆரம்பாக்கம் சந்திப்பில் இருந்து பிரதான சாலை பிரிந்து செல்கிறது. சுற்றுவட்டார கிராமத்தினர், இந்த சாலை வழியே, படப்பை, தாம்பரம் பகுதிகளுக்கு நாள்தோறும் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்த சாலையோரம் சீமை கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து உள்ளன. இதனால், இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும் போது, முட்செடிகளால் விபத்தில் சிக்கி வருகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்பதுடன், விபத்துக்களும் அடிக்கடி ஏற்படுகின்றன. எனவே, ஆரம்பாக்கம் சாலையோரங்களில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சி. ராமசந்திரன், காஞ்சிவாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ