புகார் பெட்டி
சேதமடைந்த ‛மேன்ஹோல்’ சீரமைக்க வேண்டும் காஞ்சிபுரம் தாயார்குளம் சாலை, செல்வ ஜோதி விநாயகர் கோவில் அருகில், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு நிலத்தடியில் புதைக்கப்பட்டு குழாயில் குடிநீர் திறந்து விடுவதற்காக ‛மேன்ஹோல்’ உள்ளது. கடந்த மாதம், இவ்வழியாக சென்ற கனரக வாகனம் மோதியதில், ‛மேன்ஹோல்’ மீது போடப்பட்டுள்ள கான்கிரீட் சிலாப்புகள் சேதமடைந்து சாய்ந்த நிலையில் உள்ளது. மின்விளக்கு வசதி இல்லாத அப்பகுதியில், இரவு நேரத்தில் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் உடைந்த நிலையில் உள்ள மேன்ஹோலில் சிக்கி வருகின்றனர். சிமென்ட் சிலாப்பை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். – தி.மோகன், காஞ்சிபுரம்.