தடுப்பின்றி உள்ள மழைநீர் கால்வாய்: விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
தடுப்பின்றி உள்ள மழைநீர் கால்வாய் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள் காஞ்சிபுரம் மாநகராட்சி பிள்ளையார்பாளையத்தில் இருந்து, குண்டுகுளம், கீழ்கதிர்பூர், மேல்கதிர்பூர், விஷார், பெரும்பாக்கம் செல்வோர் திருப்பருத்திகுன்றம் சாலை வழியாக சென்று வருகின்றனர். திருப்பருத்திகுன்றம் சாலையோரம் வேகவதி ஆற்றுக்கு மழைநீர் செல்லும் கால்வாய் உள்ளது. இக்கால்வாய்க்கு தடுப்பு அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், இரவு நேரத்தில், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும்போது, கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, திருப்பருத்திகுன்றம் சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாய்க்கு தடுப்பு அமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். – கே.ஜானகிராமன், பெரும்பாக்கம்.