உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள இரும்பு கழிவுகளால் அபாயம்

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள இரும்பு கழிவுகளால் அபாயம்

சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள இரும்பு கழிவுகளால் அபாயம்

வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், படப்பை அடுத்த, செரப்பனஞ்சேரி ஏரி அருகே, பழைய இரும்புக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு சேகரமாகும் பிளாஸ்டிக், இரும்பு பொருட்களை மூட்டைகளில் கட்டி நெடுஞ்சாலையோரம் குவித்து வைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் வரும் போது இரும்பு துகள்கள், காற்றில் பறந்து, வாகன ஓட்டிகளின் கண்களில் விழுவதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக நெடுஞ்சாலையோரம் குவித்து வைக்கப்பட்டுள்ள மூட்டைகளை அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ரா.சரவணன், செரப்பனஞ்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை