காஞ்சிபுரம்: புகார் பெட்டி; காட்சி பொருளாக குடிநீர் கை பம்ப்
காட்சி பொருளாக குடிநீர் கை பம்ப்
வில்லிவலம் கிராமம், பாளையக்காரர் தெருவில், ஊராட்சி நிர்வாகம் சார்பில், கை பம்ப் அமைக்கப்பட்டது. மின்சாரம் இல்லாத நேரங்களில், கை பம்ப் மூலமாக தண்ணீரை அடித்து, கிராம மக்கள் குடிநீருக்கு பயன்படுத்தி வந்தனர். குடிநீர் கை பம்ப் பழுது ஏற்பட்டு காட்சி பொருளாக உள்ளது. எனவே, குடிநீர் கை பம்ப்பின் பழுது நீக்கி, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். - -இ.ராஜா, வில்லிவலம்.