காஞ்சிபுரம்:புகார் பெட்டி;தடுப்புச் சுவரின்றி ஏரி வரத்து கால்வாய்
தடுப்புச் சுவரின்றி ஏரி வரத்து கால்வாய்
காஞ்சிபுரம் அடுத்த, பரந்துார் கிராமத்தில் இருந்து, வளத்துார் கிராமத்திற்கு செல்லும் சாலை குறுக்கே, பரந்துார் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும், பெரிய ஏரி உபரி நீர் செல்லும் போக்கு கால்வாய் உள்ளது.இந்த கால்வாய் தடுப்புகளின்றி உள்ளது. இதனால், அந்த சாலை வழியாக செல்லுவோர் நிலை தடுமாறி கவிழும் அபாயம் உள்ளது.எனவே, கால்வாயையொட்டி தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும்.- என், ஆனந்தன்,காஞ்சிபுரம்.