காஞ்சிபுரம்: புகார் பெட்டி; இணைப்பு। சாலை மைய தடுப்பில் வளர்ந்துள்ள முட்செடிகளால் அவதி
இணைப்பு। சாலை மைய தடுப்பில் வளர்ந்துள்ள முட்செடிகளால் அவதி
ஸ்ரீபெரும்புதுார் --- சிங்கபெருமாள் கோவில் ஆறுவழி மாநில நெடுஞ்சாலை, 25 கி.மீ., துாரம் உடையது. சென்னக்குப்பம், மாத்துார், வல்லம், வடகால், போந்துார், ஒரகடம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமத்தினர் தங்களின் அடிப்படை தேவைகளுக்காக, இந்த சாலையை தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.தவிர, ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையின், பராமரிப்பு மிகவும் மோசமாக உள்ளது.ஒரகடம், மாத்துார் உள்ளிட்ட பகுதிகளில், இணைப்பு சாலை மையத் தடுப்பில் சீமை கருவேல செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிபடுகின்றனர். எனவே, சீமை கருவேல உள்ளிட்ட முட்செடிகளை அகற்ற, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- து.சாந்தகுமார், ஒரகடம்.