மேலும் செய்திகள்
சாலையில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம்
03-Oct-2025
சுங்குவார்சத்திரத்தில் இருந்து திருமங்கலம் கண்டிகை செல்லும் சாலையில், நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சுங்குவார்சத்திரத்தில் உள்ள உணவகம் மற்றும் இறைச்சி கடைகளில் இருந்து கழிவுகளை இந்த சாலையோரம் கொட்டி வருகின்றனர். இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் துர்நாற்றத்தால் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக, திருமங்கலம் கண்டிகையில் இருந்து, சுங்குவார்சத்திரம் செல்லும் பள்ளி, கல்லுாரி மாணவ -- மாணவியர் நோய் தொற்று பரவும் அச்சத்தில் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளை அகற்ற வேண்டும். - த.பாஸ்கரன், திருமங்கலம் கண்டிகை.
03-Oct-2025