உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம் : புகார் பெட்டி ; கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும்

காஞ்சிபுரம் : புகார் பெட்டி ; கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும்

கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும்

உத்திரமேரூர் தாலுகா, திருப்புலிவனம் கிராமத்தில், வியாக்ரபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசை, பவுர்ணமி, சிவராத்திரி, பிரதோஷம், மாசி மகம் ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கும்.இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், அங்குள்ள குளத்தில் நீராடி சுவாமி வழிபாடு செய்து வந்தனர். தற்போது, குளம் முறையான பராமரிப்பு இல்லாமல், பாசி படர்ந்து உள்ளது.குளத்தின் படிக்கட்டுகளில் செடிகள் வளர்ந்து உள்ளன. மேலும், குளம் பராமரிப்பு இல்லாததால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.எனவே, வியாக்ரபுரீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க, கோவில் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஆர்.எஸ். அறிவழகன்,திருப்புலிவனம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !