உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்த வாகனங்களால் பயணியருக்கு இடையூறு

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்த வாகனங்களால் பயணியருக்கு இடையூறு

பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்த வாகனங்களால் பயணியருக்கு இடையூறு

சுங்குவார்சத்திரம் நான்கு சாலை சந்திப்பில், காஞ்சிபுரம் செல்லும் பேருந்து நிறுத்தத்தில், பயணியர் நிழற்குடை உள்ளது. சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் ஆட்டோ மற்றும் அப்பகுதிக்கு வரும் இருசக்கர வாகனங்கள் நிழற்குடை எதிரே, பேருந்து நிறுத்தத்தில் நிறுத்துகின்றனர்.இதனால், நிழற்குடையில் காத்திருக்கும் பயணியர், பேருந்து வரும் போது சென்று வர சிரமப்படுகின்றனர்.தவிர, பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்து நிறுத்தும் வாகனங்களால், சாலையின் நடுவில் நிறுத்தி, பயணியரை ஏற்றி செல்கிறது. இதனால், விபத்து மற்றும் நெரிசல் ஏற்படுகிறது.எனவே, பேருந்து நிறுத்தத்தில் உள்ள நிழற்குடை எதிரே நிறுத்தப்படும் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்த வேண்டும்.- வி. சங்கரமூர்த்தி,சுங்குவார்சத்திரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை