உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மின் மோட்டார் பழுதால் குடிநீர் தொட்டி வீண்

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மின் மோட்டார் பழுதால் குடிநீர் தொட்டி வீண்

மின் மோட்டார் பழுதால் குடிநீர் தொட்டி வீண்

வா லாஜாபாத் பேரூராட்சி, 5வது வார்டில், வல்லப்பாக்கம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில், மாரியம்மன் கோவில் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் குடிநீர் பயன்பாட்டிற்காக, சில ஆண்டுகளுக்கு முன், ஆழ்த்துளை கிணற்றுடன்கூடிய சிறு மின்விசை பம்ப் அமைத்து குடிநீர் வினியோகிக்கப்ப ட்டது. இந்நிலையில், மின் மோட்டார் பழுது உள்ளிட்ட காரணங்களால், சில மாதங்களாக மின்விசை பம்ப் வாயிலான குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. பயன்பாடில்லாத சிறு மின்விசை பம்ப்பை சீரமைத்து, குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - எஸ்.ஞானவேல், வல்லப்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ