உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; கான்கிரீட் பெயர்ந்த மின்கம்பம் அகற்றப்படுமா?

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; கான்கிரீட் பெயர்ந்த மின்கம்பம் அகற்றப்படுமா?

கான்கிரீட் பெயர்ந்த மின்கம்பம் அகற்றப்படுமா?

உத்திரமேரூர் ஒன்றியம், ரெட்டமங்கலம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு மின்சாரம் விநியோகம் செய்ய, அப்பகுதியில் மின் கம்பங்கள் நடப்பட்டு உள்ளன.அதில் உள்ள மின்கம்பம் ஒன்று சேதமடைந்து, கான்கிரீட் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால், மின் கம்பம் எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, சேதமடைந்த மின் கம்பத்தை அகற்ற, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- அருள்மொழி வெங்கடேசன்,ரெட்டமங்கலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ