வைப்பூர் சந்திப்பில் மின்விளக்கு சேதம்
வ ண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், ஒரகடம் அடுத்த, பனப்பாக்கத்தில் வைப்பூர் சாலை சந்திப்பு உள்ளது. எறையூர், வைப்பூர் கிராமங்களுக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். தவிர, இங்குள்ள தொழிற்சாலைகளுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சந்திப்பில், இரவு நேரங்களில் ஏற்படும் விபத்தினை தவிர்க்கும் வகையில், சில மாதங்களுக்கு முன், மின் விளக்கு அமைக்கப்பட்டது. தற்போது, மின் விளக்கு சேதமடைந்துள்ளது. இதனால், இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல், இந்த சந்திப்பை கடக்கும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்று வருகின்றனர். எனவே, சேதமான மின்விளக்கை சரி செய்ய, துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ரா. மாதவன், எறையூர்.