உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / நடைபாதையில் முட்செடிகள் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்

நடைபாதையில் முட்செடிகள் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்

நடைபாதையில் முட்செடிகள் விபத்தில் சிக்கும் பாதசாரிகள் செ ன்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காரப்பேட்டையில், சாலையோரம் கான்கிரீட் மழைநீர் வடிகால்வாயின் மீது நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயை முறையாக பராமரிக்காததால், செடி, கொடிகள் நடைபாதையை மறைக்கும் வகையில் நீண்டு வளர்ந்து, பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்வதால், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, காரப்பேட்டையில், நடைபாதையை மறைக்கும் வகையில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கே.ஜெகதீசன், காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை