புகார் பெட்டி மின்விளக்கு அமைக்க வேண்டும்
மின்விளக்கு அமைக்க வேண்டும் பொன்னேரி - திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள, அரசு கல்லுாரி முதல் வேண்பாக்கம் வரை, மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் இந்தபகுதி இருள் சூழ்ந்து உள்ளது. அலுவலகம், பள்ளி மற்றும் கோவில் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக பொன்னேரி நகரப்பகுதிக்கு சென்று வரும் பெண்கள், இதனால் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகின்றனர். மேற்கண்ட பகுதியில் மின்விளக்குகள் பொருத்த பொன்னேரி நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். - - ஆர்.ஜி.கிருஷ்ணா, பொன்னேரி.