உள்ளூர் செய்திகள்

 புகார் பெட்டி

கூளூர் ஏரிக்கரையோர சாலையை ஆக்கிரமிக்கும் கருவேல மரங்கள் திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் அருகே கூளூர் கிராம மக்கள், விவசாய நிலங்களுக்கு செல்லும் வகையில், கூளூர் ஏரிக்கரையோரம், 2 கி.மீ., தொலைவுக்கு தார்ச்சாலை உள்ளது. தற்போது, இச்சாலையை மறைக்கும் வகையில், கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதனால், கூளூர் மற்றும் மாவூரைச் சேர்ந்த மக்கள், சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சமூக விரோதிகள் மது அருந்த இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், மதுபாட்டிலை போதையில் சாலையிலேயே உடைத்துவிட்டு செல்கின்றனர். இதனால், விவசாய நிலங்களுக்கு இருசக்கர வாகனத்திலோ, நடந்தோ செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் புலம்புகின்றனர். எனவே, சாலையோரம் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சரவணன், மாவூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை