உள்ளூர் செய்திகள்

புகார்

அபாய நிலையில் அரசு அலுவலகம் ஆர்.கே. பேட்டை ஒன்றியம், ராகவநாயுடு குப்பம் ஊராட்சி அலுவலகத்தின் பழைய கட்டடம் சேதம் அடைந்துள்ளதால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பயன்பாட்டில் இருந்து கைவிடப்பட்டது. இதையடுத்து, புதிய கட்டடம் அதே பகுதியில் கட்டப்பட்டு தற்போது ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊராட்சி அலுவலகத்தின் பழைய கட்டடத்தை ஒட்டி தற்போது அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது. ஊராட்சி அலுவலகத்தின் பழைய கட்டடம் இதுவரை இடித்து அகற்றப்படாமல் உள்ளது. இந்த கட்டடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலை உள்ளது. பாதுகாப்பு கருதி இந்த கட்டடத்தை இடித்து அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். – -எல்.என். தட்சணாமூர்த்தி, ராகவநாயுடுகுப்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை