பாலத்தில் வளர்ந்த செடிகள் உறுதித்தன்மை பாதிக்கும் அபாயம்
திருவள்ளூர் - மணவாளநகர் இடையேயான ரயில்வே மேம்பால சுவரில் மரச்செடிகள் வளர்ந்துள்ளன. இந்த பாலம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த பாலம் கட்டி, 15 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த மேம்பாலத்தின் பக்கவாட்டுச் சுவர்களில் மரச் செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், பாலத்தின் உறுதித்தன்மை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாலத்தில் வளர்ந்துள்ள மரச் செடிகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ச.புகழ்வேந்தன், திருவள்ளூர்.