உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / திருவள்ளூர் / பறிமுதல் வாகனங்கள் ஏலம் விடப்படுமா?

பறிமுதல் வாகனங்கள் ஏலம் விடப்படுமா?

திருத்தணி இந்திரா நகரில், ‘டி1’ காவல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, சட்டம் – ஒழுங்கு போலீசார், குற்ற வழக்குகள் மற்றும் விபத்துகளில் சிக்கிய இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படாததால், வாகனங்கள் சேதமடைந்து, மண்ணோடு மண்ணாக மட்கி வீணாகின்றன. காவல் நிலையத்தின் பின்புறம் மற்றும் எதிரே, தனியார் வீட்டுமனைகளில் பறிமுதல் செய்த வாகனங்களை, போலீசார் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த வாகனங்கள் ஏலம் விடப்பட்டால், அரசுக்கு வருவாய் கிடைப்பதுடன், பலர் இந்த வாகனங்களை வாங்கி பயன்படுத்துவர். எனவே, மாவட்ட எஸ்.பி., சாய் பிரணீத், பறிமுதல் வாகனங்களை ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். – கே.செல்வகுமார், திருத்தணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !