மேலும் செய்திகள்
விழுப்புரத்தில் ஏ.டி.எம்., திறப்பு
14-Dec-2024
கும்மிடிப்பூண்டி நகரை ஒட்டிய சாமிரெட்டிகண்டிகை, பெத்திக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியாகும். அங்கு, முனுசாமி நகர், பெரியார் நகர், பூபால் நகர், ஸ்ரீராம் கார்டன், சபரி கார்டன் என, 20க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன.மேலும், 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அப்பகுதியினர், அவசர பண தேவைக்கு, மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கும்மிடிப்பூண்டி நகர் பகுதி ஏ.டி.எம்., மையங்களுக்கு செல்ல வேண்டும்.இரவு நேரத்தில் பெண்களும், முதியவர்களும் பணம் எடுக்க வெகு தொலைவு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. பகுதிவாசிகளின் நலன் கருதி, சாமிரெட்டிகண்டிகை பகுதியில் வங்கி ஏ.டி.எம்., மையம் திறக்கப்பட வேண்டும்.- எஸ்.சதானந்தன்,கும்மிடிப்பூண்டி.
14-Dec-2024