உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / திருவள்ளூர் / திருவள்ளூர்: புகார் பெட்டி; சீரமைத்தும் பூட்டப்பட்டுள்ள மகளிர் கழிப்பறை

திருவள்ளூர்: புகார் பெட்டி; சீரமைத்தும் பூட்டப்பட்டுள்ள மகளிர் கழிப்பறை

சீரமைத்தும் பூட்டப்பட்டுள்ள மகளிர் கழிப்பறை

திருத்தணி ஒன்றியம், வேலஞ்சேரி காலனியில், மகளிர் கழிப்பறை வளாகம், ஆறு ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. இந்த வளாகம் பராமரிப்பின்றி இருந்தது. இதையடுத்து கடந்த மாதம், ஊராட்சி நிர்வாகம், 1 லட்சம் ரூபாய் மதிப்பில், மகளிர் கழிப்பறை வளாகத்தை சீரமைத்து தயார் நிலையில் வைத்துள்ளது.ஆனால், மகளிர் கழிப்பறை வளாகத்திற்கு பூட்டு போட்டு பயன்பாட்டிற்கு விடாமல் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது.இதனால் அப்பகுதி மகளிர் கழிப்பறை வளாகத்தை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம், நடவடிக்கை எடுத்து, தயார் நிலையில் உள்ள மகளிர் கழிப்பறையை திறந்து விட வேண்டுகிறேன்.- எஸ். செல்வம்,வேலஞ்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை