திருவள்ளூர்: புகார் பெட்டி ;கழிவுநீர் சூழ்ந்த பயணியர் நிழற்குடை
திருமழிசை பேரூராட்சியில் நுழைவு பகுதியில் அமைந்துள்ள பயணியர் நிழற்குடையை பயன்படுத்தி இப்பகுதிவாசிகள் திருவள்ளூர், திருத்தணி மார்க்கமாக சென்று வருகின்றனர். இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் கழிவு நீர் பயணியர் நிழற்குடை பகுதியில் குளம் போல் தேங்கியுள்ளது.இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் பேருந்துக்காக காத்திருக்கும் பகுதிவாசிகள் கடும் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடையை சூழ்ந்துள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- க. கார்மேகம், திருமழிசை.